20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேக்கம் - அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக லாரி ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு

நாகையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு 200 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இறக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளன.
20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேக்கம் - அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக லாரி ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு
x
டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் அரசு சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாகையில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டுவரப்பட்ட 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இறக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளன. இது குறித்து லாரி ஓட்டுனர்கள் கூறுகையில் அதிகாரிகள் கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டினர்.மேலும் ஒரு வார காலமாக நெல் மூட்டைகளை இரவு பகல் பாராமல் பாதுகாத்து வருவதாகவும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்