பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
பவானி சாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது
பவானி சாகர் அணை மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஜனவரி மாதம் முதல் 2ஆம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அணைக்கான நீர்வரத்து குறைந்தது. இதனால், நீர்மட்டம் சரிந்தது. இதைத் தொடர்ந்து, பாசனத்துக்கு விநாடிக்கு 820 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 52 அடியாகவும், நீர் இருப்பு 5 புள்ளி 2 டிஎம்சி யாகவும், நீர்வரத்து விநாடிக்கு 114 கனஅடியாகவும் உள்ளது.
Next Story