ரூ44,43,000 மதிப்புள்ள 1,364 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னையை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர் பெல்ட்டில் மறைத்து வைத்திருந்த 972 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ரூ44,43,000 மதிப்புள்ள 1,364 கிராம் தங்கம் பறிமுதல்
x
கத்தாரில் இருந்து மஸ்கட் வழியாக சென்னை வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது சென்னையை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர் பெல்ட்டில் மறைத்து வைத்திருந்த 972 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதுப்போல் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த முகமது இக்பால் என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 202 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த அப்துல் ரகீம் என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 190 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் 44 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 364 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Next Story

மேலும் செய்திகள்