புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்
பதிவு : ஏப்ரல் 24, 2019, 06:52 PM
5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு ஒன்றில் ஜாமீன் கோரி முருகேசன் உள்ளிட்ட 2 பேர், தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னையில் மட்டும், 10 ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 2017 - ல்  297 ஆக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது 2018 ஆம் ஆண்டில், 476 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை வழக்குகளில் 868 வழக்குகள் தண்டனையிலும், ஆயிரத்து 558 வழக்குகள் விடுதலையிலும் முடிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முழுமையாக இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, 2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2018-ல் குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்தார். மேலும், புலன் விசாரணையின் தரத்தை  மேம்படுத்த முன்னாள் காவல் ஆணையர் ஆர். நடராஜ், ஒய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் சித்தண்ணன், மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ, பேன்யன் அமைப்பின் இயக்குனர் கிஷோர் குமார், அண்ணா நகர் துணை ஆணையர் சுதாகர் அடங்கிய குழுவை அமைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். 8 வாரங்களில் அறிக்கை அளிக்க அக்குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி,  டிஜிபியின் அறிக்கை முழுமையாக இல்லாததால் மாவட்டங்களின் முழு விவரங்களை திரட்டி, அறிக்கையுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.