வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் திடீர் ஆய்வு : மாவட்ட ஆட்சியர் சோதனை - கோவையில் பரபரப்பு
பதிவு : ஏப்ரல் 23, 2019, 05:12 PM
கோவையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை என்ற புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் முடிந்து வாக்கு இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், 144 கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து 10.3 மணியில் இருந்து, பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று, பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில்  ஆய்வு மேற்கொண்டார்.  அதைதொடர்ந்து தொழில்நுட்ப பிரிவினர் 5 மணி நேர முயற்சிக்கு பிறகு  செயலிழந்த கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் வேலை செய்ய தொடங்கியுள்ளன. பணி முடியும் வரை  உடனிருந்த மாவட்ட ஆட்சியர், கேமராக்கள் இயங்குவதை உறுதி செய்த பின்னர் புறப்பட்டார். இதுதொடர்பாக சிசிடிவி கேமராக்கள் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

775 views

பிற செய்திகள்

ஒசூர் : முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

50 views

கணவனையும், குழந்தையையும் மனைவியே கொன்ற வழக்கு : கள்ளக்காதலனை கைது செய்த போலீசார்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவில் கணவனையும், ஒரு வயது குழந்தையும் கொன்ற வழக்கில், ஜெயராஜ் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

866 views

காவல் நிலைய வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பழைய கார்கள்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா டி - 5 காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய கார், வேன்களில் இன்று காலை திடீரென தீப்பற்றியது.

37 views

சூலூர் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு : மனநிறைவாக உள்ளது - ம.நீ.ம. வேட்பாளர் கருத்து

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

35 views

ஆர்வத்துடன் வாக்களித்த மாற்றுத்திறனாளி பெண்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஆர்வத்துடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

20 views

கல்லால் தாக்கி இளைஞர் படுகொலை : போலீசார் தீவிர விசாரணை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்கால்மேடு பேருந்து நிறுத்தம் அருகில், மயில்சாமி என்ற இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

113 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.