காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : 8 ஆம் வகுப்பு மாணவனை அழைத்து எச்சரித்த போலீசார்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எட்டாம் வகுப்பு மாணவனை அழைத்து, போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : 8 ஆம் வகுப்பு மாணவனை அழைத்து எச்சரித்த போலீசார்
x
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எட்டாம் வகுப்பு மாணவனை அழைத்து, போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர்.  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மிரட்டல் தொலைபேசி வந்துள்ளது. இதனையடுத்து அந்த தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் சோதனை செய்தது போது,  அது ராயப்பேட்டையை சேர்ந்த சங்கீதா என்பவருடைய  செல்போன் என தெரியவந்துள்ளது. விசாரித்தபோது சங்கீதாவின் மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் விளையாட்டாக, அவருடைய செல்போனில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி கூறிவிட்டு இணைப்பை துண்டித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுவனை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து சிறுவன் என்பதால் ராயப்பேட்டை போலீஸ் அவனை எச்சரித்து இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அனுப்பினர்


Next Story

மேலும் செய்திகள்