800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரகம் திடுக்கிடும் தகவல்

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் 800 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருவதாக கல்வித்துறை திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.
800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரகம் திடுக்கிடும் தகவல்
x
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் மாநிலம் முழுவதும் தமிழக அரசின் உரிய அங்கீகாரமின்றி 800 பள்ளிகள் இயங்கி வருவதாகவும் இந்த பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் எந்த ஒரு பள்ளியும் இயங்கக் கூடாது என கூறப்பட்டுள்ள நிலையில் அங்கீகாரமின்றி பள்ளிகள் இயங்கி வருவது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக இந்த 800 பள்ளிகளும் அங்கீகாரம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்