"கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது" - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
x
தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள  ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த குடியிருப்புகளின் கழிவுநீர் தாமிரபரணி ஆற்றுக்குள் விடுவதால் ஆற்று நீர் மாசுபட்டு வருவதாக என நெல்லையை சேர்ந்த கணேசன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்