2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு
x
2019 - 2020ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் RANDOM NUMBER வழங்கப்படும் என்றும், அதனைதொடர்ந்து மாவட்ட அளவில் சான்றிதழ் சரி பார்த்தல் பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் இறுதி வாரத்தில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கள் உள்ளிட்டோருக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் இருந்து கடைசி வாரம் வரை நடைபெறும் என்று உயர்கல்வித்துறையின் செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்