பன்றி இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள்
பதிவு : ஏப்ரல் 21, 2019, 12:31 PM
சென்னையில், பன்றி இறைச்சி பக்கோடா கடைகாரர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணியை சேர்ந்த சீனிவாசன், அதே பகுதியில் பன்றி இறைச்சி பக்கோடா கடை நடத்தி வந்துள்ளார். சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல சீனிவாசன் அங்கும் இங்கு திரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சீனிவாசனை துரத்திய மர்ம கும்பல், அவரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பிச்சென்றது. இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பன்றி வளர்ப்பவர்களுக்கு தெரியாமல், பன்றிகளை திருடி விற்பனை செய்து வந்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் சீனிவாசன் அடித்து கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக நாகல்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், மர்மகும்பல் தப்பிச்சென்ற இரண்டு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு குரோம்பேட்டையை சேர்ந்த விஜய் மற்றும் பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தினர்.  அதில், மதுபோதையில் இருந்த சீனிவாசன், வாகனத்தில் சென்று கொண்டு இருந்த விஜய் மற்றும் பார்த்திபனை இரும்பு கம்பியால் தாக்கியதும், இதனையடுத்து அவர்கள் இருவரும் மொபைல் போன் மூலம் நண்பர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து சீனிவாசனை தாக்கிவிட்டு தப்பியதும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக விஜய், பார்த்திபன், ஆனந்த்,  டில்லிபாபு, கண்ணன, சூர்யா உள்பட 7 பேரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள கரண் என்பவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1169 views

பெருவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரிப்பு - இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு

கொரோனா தொற்று பரவல் பெரு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நி​லையில், தற்போது அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரமாக உள்ளது.

32 views

ஒரே கடையில் வெவ்வேறு கட்டுப்பாடுகள் - ஷாப்பிங் செய்ய சென்ற மக்கள் குழப்பம்

பிரேசிலில் அதிக மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோ நகரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

28 views

கொரோனா பரவல் குறித்து விவாதம் செய்தபோது விபத்து - பாக். விமானத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம்

பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த விமான விபத்துக்கு விமான ஓட்டிகளே காரணம் என அந்நாட்டு விமானத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

17 views

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை

ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

15 views

(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு

(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு

15 views

பிற செய்திகள்

லாரியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி - தற்கொலை செய்தது அம்பலம்

சென்னை குன்றத்தூரில் லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

1688 views

தேர்தல் நடத்தும் விதியில் திருத்தம் தவறானது - ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் விதிமுறையில் திருத்தங்கள் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

74 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, வல்லம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

14 views

"சாத்தான்குளம் வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் மூன்று நாள் சிபிஐ காவல்" - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஐந்து காவலர்களும் சிபிஐ காவலில் விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்

12 views

முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி பயணம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

26 views

சென்னையில் குறையும் கொரோனாவின் தாக்கம்

சென்னையில் நேற்று மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

337 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.