பன்றி இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள்
பதிவு : ஏப்ரல் 21, 2019, 12:31 PM
சென்னையில், பன்றி இறைச்சி பக்கோடா கடைகாரர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணியை சேர்ந்த சீனிவாசன், அதே பகுதியில் பன்றி இறைச்சி பக்கோடா கடை நடத்தி வந்துள்ளார். சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல சீனிவாசன் அங்கும் இங்கு திரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சீனிவாசனை துரத்திய மர்ம கும்பல், அவரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பிச்சென்றது. இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பன்றி வளர்ப்பவர்களுக்கு தெரியாமல், பன்றிகளை திருடி விற்பனை செய்து வந்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் சீனிவாசன் அடித்து கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக நாகல்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், மர்மகும்பல் தப்பிச்சென்ற இரண்டு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு குரோம்பேட்டையை சேர்ந்த விஜய் மற்றும் பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தினர்.  அதில், மதுபோதையில் இருந்த சீனிவாசன், வாகனத்தில் சென்று கொண்டு இருந்த விஜய் மற்றும் பார்த்திபனை இரும்பு கம்பியால் தாக்கியதும், இதனையடுத்து அவர்கள் இருவரும் மொபைல் போன் மூலம் நண்பர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து சீனிவாசனை தாக்கிவிட்டு தப்பியதும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக விஜய், பார்த்திபன், ஆனந்த்,  டில்லிபாபு, கண்ணன, சூர்யா உள்பட 7 பேரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள கரண் என்பவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1452 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4871 views

பிற செய்திகள்

இளஞ்சிவப்பு நிறப்பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்...

அத்திவரதர் உற்சவத்தின் 21வது நாளான இன்று, அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் காட்சி தந்து வருகிறார்.

2 views

"நதிகள் மீட்பு பயணம் 100 சதவீதம் வெற்றி" - ஜக்கி வாசுதேவ்

"காவேரி கூக்குரல்" திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் ஈஷா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

14 views

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான்... ரூ.18 லட்சம் நிதி திரட்டல்

சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.

31 views

இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா? : ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக D.ராஜா, தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது.

15 views

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் : கும்பகோணத்தில் சிலை வைக்க ரசிகர்கள் கோரிக்கை

கும்பகோணத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அமைக்க, சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

45 views

விருத்தாச்சலம் : குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் குடும்ப நடத்த வர மறுத்த மனைவி மற்றும் அவரை அனுப்பி வைக்க மறுத்த மாமியாரை மருமகன் கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.