பொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது? : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.
பொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது? : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
x
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. பொறியியல் படிப்பு சேர்க்கை கலந்தாய்வை இந்த ஆண்டில், முதன் முறையாக தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் என செய்திகள் வெளியாகியுள்ள. இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு  1200 மதிப்பெண்களுக்கு பதிலாக  600 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதனால் கட் ஆப் மதிப்பெண் குறித்த விவரங்கள் புதிதாக வெளியிடப்படவுள்ளன. இந்நிலையில் பொறியியல் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு, ஆன்-லைன் பதிவு தேதி, கட் ஆப் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை இன்று காலை உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்