மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு : ஆயிரக்கணக்காக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

மதுரை அழகர் கோவில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான இன்று மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு : ஆயிரக்கணக்காக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
x
மதுரை சித்திரை திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று வீரராவகப் பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டகப்படியில் கள்ளளகர் எழுந்தருளினார். அங்கு நடந்த திருமஞ்சனத்தை தொடர்ந்து, கள்ளழகர் கருடவாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது. தவளையாக இருந்த தபசு முனிவருக்கு சாபவிமோசனம் அளித்ததை சுட்டிக்காட்டும் வகையில், முனிவரின் உருவம் அருகில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் வகையில் அங்கிருந்து நாரைகொக்கு வானில் பறக்கவிடப்பட்டது. இதனை ஆயிரகணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். 20 ஆண்டுக்கு பின்னர், கி்ராம மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, தேனூர் மண்டபத்தை கள்ளழகர் பெருமாள் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், இரவு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு நடைபெறும் திருமஞ்சனத்தை தொடர்ந்து விடிய விடிய தசாவாதாரம் நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்