அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் இன்று  ஆலோசனை கூட்டம்
x
4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிந்துள்ள  நிலையில், காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய மேலும் 4 தொகுதி தேர்தலையொட்டி, அந்தத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை திமுக நியமித்துள்ளது. இந்நிலையில், காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் துவங்கும் கூட்டத்தில், தேர்தல் பொறுப்பாளர்களுடன் தேர்தல் வியூகம் குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்