முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்
x
74வது ஆண்டை சிறப்பிக்கும் விதமாக மலையாள மக்களின் பாரம்பரிய உடையணிந்து முத்துப்பல்லக்கில் கலந்து கொண்டனர். பின்பு நடந்த ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க, குடைகள் சூழ பெண்கள் சீர்வரிசை தட்டு ஏந்தி வந்தனர். முத்துப்பல்லக்கை சிறப்பிக்கும் விதமாக  வீதியில் ,கதகளி, பஞ்சவாத்தியம், ஆகியவை இடம் பெற்றன. பின்பு இரவில் நடைபெற்ற முத்துபல்லக்கு ஊர்வலத்தில் வண்ண ஒளியில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story

மேலும் செய்திகள்