9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை - சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல்

சென்னையில் 2018 ம் ஆண்டில் சுமார் 9 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை - சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல்
x
சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு மனிதாபிமானமற்ற முறையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தொடரபட்ட வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் ,சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது தகுதியான கால்நடை மருத்துவர்களைக் கொண்டு உடல் ரீதியாக தகுதி பெற்ற நாய்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும்,ஒரு நாளைக்கு 10 நாய்கள் வீதம்,கடந்த ஆண்டில் சுமார் 9 ஆயிரம் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதனையடுத்து விசாரணையை ஏப்ரல் 22 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்