தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராம மக்கள் : 16 பேர் மட்டுமே வாக்களித்த வாக்குச் சாவடி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜகண்டிகை கிராமத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இரும்பு உருக்கு தொழிற்சாலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராம மக்கள் : 16 பேர் மட்டுமே வாக்களித்த வாக்குச் சாவடி
x
அந்த தொழிற்சாலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் நீண்ட நாட்களாக  போராடி வரும் நிலையில், வாக்குப்பதிவு செய்ய யாரும் வராததால் வாக்குப் பதிவு மையம் வெறிச்சோடியது. இதனையறிந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தொழிற்சாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்தனர். இதனால் 5 மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. எனினும் 552 வாக்காளர்கள் கொண்ட அந்த மையத்தில் 10  ஆண்கள் 6 பெண்கள் என 16 பேர் மட்டுமே வாக்கு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்