"சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடும் சிரமம்" - பயணிகள் குற்றச்சாட்டு

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் போதிய குடியுரிமை சோதனை கவுன்டர்கள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடும் சிரமம் - பயணிகள் குற்றச்சாட்டு
x
சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவு நேரங்களில் அதிக விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன.  இரவு 10 மணி முதல் அதிகாலை வரை 15 நிமிடங்களுக்கு ஒரு விமானம் புறப்பட்டு சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து , சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் ஏராளமான பயணிகள் வருகின்றனர்.ஆனால்,போதிய குடியுரிமை சோதனை கவுன்டர்கள் இல்லாததால்  பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். தங்கள் உடமைகளை விமான நிலையத்திற்குள் எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் டிராலிகளை வெளியே வைக்காமல் விமான நிலையத்தின் உள்ளே குவித்து வைக்கப்பட்டதால் சிரமத்திற்கு ஆளானதாக பயணிகள் தெரிவித்தனர்.சிறிய நாடுகளில்  உள்ள விமான நிலையங்கள் கூட அனைத்து நவீன வசதிகளுடன் சிறப்பாக உள்ள நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் சென்னை சர்வதேச விமான நிலையம் 25 ஆண்டுகள் பின் தங்கியுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்