திருமண வீடு போல அலங்கரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம் : வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வாக்காளர்களை கவரும் விதமாக பல்வேறு அலங்காரங்களுடன் வாக்குச்சாவடி மையம் காட்சியளித்த‌து.
திருமண வீடு போல அலங்கரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம் : வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வாக்காளர்களை கவரும் விதமாக பல்வேறு அலங்காரங்களுடன் வாக்குச்சாவடி மையம் காட்சியளித்த‌து. வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக மன்னார்குடியில் உள்ள தேர்தல் ஆணையம் ஒன்றில், வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி மையத்தின் வாசலில் வாழை மர தோரணங்களும், பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. இதனை கண்டு வாக்காளர்கள் வியந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்