தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் தேர்தல் : 95 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

தமிழகம், புதுச்சேரி உட்பட 12 மாநிலங்களில் 2ஆம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் தேர்தல் : 95 தொகுதிகளில் இன்று  வாக்குப்பதிவு
x
முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதியன்று 91 தொகுதிகளில் முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று 95 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, அசாமில் 5, பீகாரில் 5 , சத்தீஸ்கரில் 3 , காஷ்மீரில் 2 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் 14, மகாராஷ்டிராவில் 10 , மணிப்பூரில் ஒன்று, ஒடிசாவில் 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல், உத்தரபிரதேசத்தில் 8 , மேற்கு வங்கத்தில் 3 , புதுச்சேரியில் ஒன்று, தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், என மொத்தம் 12 மாநிலங்களில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இது தவிர தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 7 கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஒட்டுமொத்தமாக வரும் மே 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Next Story

மேலும் செய்திகள்