கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை தேரோட்டம் : தாலியை கழற்றி வளையல் உடைத்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள்

விழுப்புரம் அருகே கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை தேரோட்டம் : தாலியை கழற்றி வளையல் உடைத்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள்
x
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோயில் உள்ளது. திருநங்கைகளின் புனித தலமாக கருதப்படும் இக்கோயிலில் கடந்த 2ஆம் தேதி கொடியெற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்கள் மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில், தாலி, வளையல், ஆபரண பொருட்களை கொண்டு மணப்பெண்களை போல் அலங்கரித்து கோவிலுக்கு வந்த திருநங்கைகள் அரவான் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் கோவிலின் முன்பாக பூசாரிகள் கையால் தாலி கட்டிக் கொண்டனர். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் திருநங்கைகள் அரவாண் சாமியை கணவனாக நினைத்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதனிடையே காலை தொடங்கிய சித்திரை தேரோட்டத்தில் பங்கேற்ற  ஆயிரக்கணக்கான மக்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் அழிகளம் நோக்கி புறப்பட்ட போது மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கதறி அழுத திருநங்கைகள் தாலிகளை அறுத்து வளையல்களை உடைத்து தலையில் சூடியிருந்த பூக்களை பிய்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து வெள்ளை ஆடை உடுத்தி, திருநங்கைகள் விதவைக் கோலம் பூண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்