வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : பழமையான திருநெல்லி கோவிலில் சிறப்பு வழிபாடு

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பழமையான திருநெல்லி கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் செய்தார்.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : பழமையான திருநெல்லி கோவிலில் சிறப்பு வழிபாடு
x
பிரம்மகிரி மலைத்தொடரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில் முன்னோர்களுக்கான சடங்குகள் செய்வதில் பிரசித்திப் பெற்றதாகும். இந்நிலையில், ராகுல் காந்தி தனது தந்தை, பாட்டி மற்றும் முன்னோர்களுக்கும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கும் தர்ப்பணம் வழங்கினார். அந்த கோயிலுக்கு செல்ல ராகுல்காந்தி கால்நடையாக வெகுதூரம் நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்