கூத்தாண்டவர் கோயில் திருவிழா : கூத்தாண்டவருக்கு முன் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்
பதிவு : ஏப்ரல் 17, 2019, 09:57 AM
புதுச்சேரி பிள்ளையார் குப்பம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில், வழக்கமாக நடைபெறும் திருநங்கைகளுக்கான ஆடை - அலங்கார போட்டி தேர்தலை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கையர் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு முன் தாலி கட்டிக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து  நடைபெறுவதாக இருந்த ஆடை அலங்காரப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனை காண வந்த ஏராளமான  பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


திருத்தணி முருகன் கோவில் தேரோட்டம்
திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவையொட்டி தேரோட்டம் நேற்று நடைபெற்றது.இதில் புதிதாக உருவாக்கப்பட்ட மரத்தேரில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற19ம் தேதியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

தந்தி மாரியம்மன் கோயில் திருத்தேர் உற்சவம் : கோலாட்டம் ஆடியவாறு பக்தர்கள் உற்சாக ஊர்வலம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தந்தி  மாரியம்மன் கோயில் திருதேரோட்ட உற்சவ விழா வெகு விமர்சையாக  நடைப்பெற்றது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி மே முதல் வரை நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மாரியம்மன் கோவில் திருவிழா அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள  மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக   நடைபெற்றது.இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் பக்தர்கள் பால் குடம், காவடி, தீச்சட்டி எடுத்து அலகு குத்தி தங்களது  நேர்த்தி கடன்களை செலுத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

534 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4043 views

பிற செய்திகள்

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

8 views

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

7 views

மத்திய அரசு உத்தரவின் பேரில் சபரிமலையில் தடை உத்தரவு - கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தான் சபரிமலையில் தடை உத்தரவு பிறப்பிக்கபட்டதாக ஆதாரத்தை வெளியிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

8 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.