மனைவியின் தலையை வெட்டி கொன்ற கணவன்
பதிவு : ஏப்ரல் 17, 2019, 03:12 AM
மனைவியின் தலையை துண்டித்து கணவன் கொன்ற பயங்கரம் ஈரோடு அருகே நடந்துள்ளது. மனைவியின் உடலோடு பைக்கில் சென்ற அவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர், முனியப்பன். அவரது மனைவியின் பெயர் நிவேதா. எரிவாயு சிலிண்டர் நிறுவனத்தில் முனியப்பனும், அங்குள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் அவரது மனைவி நிவேதாவும் பணி புரிந்து வந்தனர்.
இந்த நிலையில், திங்கள் கிழமை இரவு வேலை முடித்துவிட்டு முனியப்பன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி வேறொரு இளைஞருடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுறது. 
மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முனியப்பன் கோபத்தின் உச்சத்திற்கு சென்றதாக தெரிகிறது. அதன்பின்னர், மனைவியை அவரது  தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் முனியப்பன் அழைத்துச் சென்றுள்ளார். பவானி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எருக்காட்டு வலசு பகுதியில் வந்தபோது, கணவன் மனைவி இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, நிவேதாவை கீழே தள்ளி கழுத்தை அறுத்த முனியப்பன், தலையை தனியே துண்டித்து எடுத்தாக திடுக்கிடும் தகவல் வெளியாகி யிருக்கிறது. 

அதன் பின்னர் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது துண்டிக்கப்பட்ட தலையையும், உடலையும் வைத்து  முனியப்பன் சென்றிருக்கிறார். அதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்  முனியப்பனை கைது செய்ததுடன், நிவேதா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியின் தலையை அறுத்து முண்டத்தோடு பைக்கில் ஊர்வலமாக சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.