பி.எஸ்.கே கட்டுமான குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை

பிஎஸ்கே கட்டுமான குழுமத்தில் நடந்த சோதனையில் 112 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.கே கட்டுமான குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை
x
பிஎஸ்கே கட்டுமான குழுமத்தில் நடந்த சோதனையில் 112 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி அரசு ஒப்பந்ததாரரான பெரியசாமி என்பவருக்கு சொந்தமான இடங்களில், கோடிக்கணக்கிலான பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, சென்னை மற்றும் நாமக்கல்லில் 7 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதையடுத்து, கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சோதனையில்14.15 கோடி ரூபாய் பணம் சிக்கியிருப்பதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையில் 112 கோடி ரூபாய் கணக்கில் வராத சொத்து ஆவணங்களும் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில், சோதனையின்போது அமைச்சர் ஒருவருக்கு தேர்தல் செலவுக்காக பணம் ஏற்பாடு செய்தது தொடர்பான ஆவணங்கள் மற்றும் செலவு செய்த ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவண ஆதாரங்களை தேடி வருவதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்