"நாளை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது" - தேர்தல் ஆணையம்

தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளை மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாளை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது - தேர்தல் ஆணையம்
x
தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளை மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்தல் பிரசாரத்தை திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, சமூக வலைதளங்களில் மேற்கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்தினால், 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளிநபர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை 6 மணி முதல் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி மாலை 6.30 மணி வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளை மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்