கருணாநிதி பிறந்த நாளில் முதல்வராகிறார் ஸ்டாலின் - தயாநிதி மாறன்

கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பார் என தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
கருணாநிதி பிறந்த நாளில் முதல்வராகிறார் ஸ்டாலின் - தயாநிதி மாறன்
x
மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அவர், நுங்கம்பாக்கத்தில் பிரசாரம் செய்தார். அந்தப் பகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளதாக கூறிய தயாநிதி மாறன், கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களால், தற்போது தண்ணீர் வருவதாக தெரிவித்தார். பிரசாரத்தின் இடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறினார்.       

Next Story

மேலும் செய்திகள்