நரசிங்கப் பெருமாள் கோயில் சிறப்பு வழிபாடு

அம்மையநாயக்கனூர் நரசிங்கப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நரசிங்கப் பெருமாள் கோயில் சிறப்பு வழிபாடு
x
சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் ஒரே கருவறையில் வீற்றிருக்கும் இந்த கோயிலில், இன்று காலை நடைபெற்ற  உச்சிகால பூஜையில்,ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று சாமியை தரிசனம் செய்தனர்.

நல்லூர் முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலையில் கந்த பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. முக்கியவீதிகளில்  மயில் வாகனத்தில் வலம்  வந்த கந்தப் பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சுவாமிமலையில் 60 படிகளில் பூஜை - 60 ஆண்டுகளை குறிக்கும் படிக்கட்டுகள்




சுவாமிமலை முருகன் கோயிலில்  தமிழ்ஆண்டுகள் அறுபதை  குறிக்கும் 60 படிகளில் விளக்கு பூஜை  நடந்தது.முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான  சுவாமிமலையில் உள்ள  60 படிகளில் 60 ஆண்டுகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.விகாரி ஆண்டு பிறப்பை ஒட்டி நடந்த, படி பூஜையை காரைக்குடியிலிருந்து பல ஆண்டுகளாக வரும் மூதாட்டி ஒருவர் விளக்கு பூஜையை துவக்கி வைத்தார்.சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க ,சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான  பக்தர்கள் வந்திருந்தனர்.

வெக்காளி அம்மன் கோயில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு




திருச்சி வெக்காளி அம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.பின்னர், அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்



சித்திரை திருநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாரபுரத்தில் உள்ள கோட்டை மாரி கோவிலில்,அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீர்த்தக்குடங்கள் எடுத்து பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்