"ரிசர்வ் வங்கிப் பணி அரசு பணியல்ல" - சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

ரிசர்வ் வங்கி பணி அரசு பணியல்ல என ரிசர்வ் வங்கி பணியாளர் மனோஜ் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கிப் பணி அரசு பணியல்ல - சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்
x
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வு விண்ணப்பத்தில் அரசுப் பணியில் இல்லை எனக் கூறியதற்காக, ரிசர்வ் வங்கி பணியாளரின் மனோஜ் குமார் என்பவரின் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து மனோஜ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்து தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து மனோஜ் குமார் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள்  சசிதரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி பணி அரசுப் பணியல்ல என்று கூறிய நீதிபதிகள், விண்ணப்பத்தில் அரசு ஊழியரா என்று மட்டும் கேட்கப்பட்டிருந்ததால், மனுதாரர் அந்த பதிலை அளித்துள்ளதாக விளக்கமளித்தனர். எனவே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற மனோஜ் குமாருக்கு ஒரு வாரத்தில் பணிநியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்