தியாகராஜசுவாமி கோவில் சிலைகளின் தொன்மை தன்மை : இன்று முடிவடைந்த ஆய்வு - விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு

திருவாரூர் தியாகராஜசுவாமி கோவிலில் சிலைகளின் தொன்மைதன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வு முடிவடைந்தது.
தியாகராஜசுவாமி கோவில் சிலைகளின் தொன்மை தன்மை : இன்று முடிவடைந்த ஆய்வு - விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு
x
திருவாரூர் தியாகராஜசுவாமி கோவிலில், உள்ள உலோக திருமேனி  சிலைகள் பாதுகாப்பகத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 79 சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகளின் தொல்லியல்தன்மை குறித்து, 7 கட்டங்களாக ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. தொல்லியல் துறை தென் மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் 40 அதிகாரிகள் மற்றும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆய்வை மேற்கொண்டனர்.  இந்த ஆய்வு குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்