பொள்ளாச்சி வழக்கில் சிபிசிஐடி ரகசிய அறிக்கை தாக்கல் - வழக்கு விசாரணை ஏப்.25 க்கு ஒத்தி வைப்பு

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரிய வழக்கு ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வழக்கில் சிபிசிஐடி ரகசிய அறிக்கை தாக்கல் - வழக்கு விசாரணை ஏப்.25 க்கு ஒத்தி வைப்பு
x
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது சகோத‌ர‌ர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழக அரசு கடந்த மாதம்13 ஆம் தேதி சிபிஐக்கு மாற்றி  அரசாணை பிறப்பித்த‌து. இந்நிலையில் சிபிஐ நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என கோரி வழக்கறிஞர் புகழேந்தி பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தஹில்ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த‌து. அப்போது இதுவரை வழக்கினை விசாரணை செய்துவரும் சிபிசிஐடி போலீசார் ரகசிய அறிக்கை ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பெண்ணின் பெயர் இடம் பெற்றிருந்த‌தால் அந்த அரசாணையை ரத்து செய்து புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசின் புதிய அரசாணை இதுவரை கிடைக்காத‌தால் சிபிஐ விசாரணையை நீதிமன்றம் கண்காணிப்பது தொடர்பாக தன்னால் பதில் அளிக்க முடியாது என்றார். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்