வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
x
வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை  மாவட்டம் ஆயக்குடி மற்றும் தென்காசியில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகப்பட்சமாக வெப்பநிலை 35டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் அந்த  மையம்  தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்