திருப்பூரில் பாஜக திமுக இடையே போஸ்டர் யுத்தம்...

திருப்பூர் தேர்தல் களத்தில் சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
திருப்பூரில் பாஜக திமுக இடையே போஸ்டர் யுத்தம்...
x
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தனும், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை  கேரள அரசு அமல்படுத்தியதால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக பாஜகவினர் பிரசாரம் செய்துவந்தனர். திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இங்கு ஐயப்பன் பக்தர்கள் இருப்பதால் திமுக - கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என அவர்கள் போஸ்டர்களை ஒட்டினர். இதற்கு பதிலடியாக ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டியதாகவும் திமுக கூட்டணியினர் பிரசாரம் செய்து வந்தனர். அவர்கள் பெண் குழந்தைகள் இருப்பதாலும், தொழில்துறை நலிவடைந்திருப்பதாவலும் அதிமுக பாஜகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் எனவும் வீடுகளில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர் .. 


Next Story

மேலும் செய்திகள்