வறுமை காரணமாக ஆடு மேய்க்க அனுப்பப்பட்ட சிறுவர்கள் : அதிரடியாக மீட்ட வருவாய் கோட்டாட்சியர்
பதிவு : ஏப்ரல் 09, 2019, 03:13 AM
வறுமையின் காரணமாக கொத்தடிமையாக ஆடு மேய்க்க அனுப்பப் பட்ட ஐந்து சிறுவர்கள் நாகை அருகே அதிரடியாக மீட்கப்பட்டுள்ளனர் .
விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் முத்துகிருஷ்ணன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு தனது மகன்கள் ஐந்து பேர்களை  ஆடு மேய்க்கும் வேலைக்கு  அனுப்பி வைத்துள்ளார். ஆடும் மேய்ப்பதற்காக பல்வேறு ஊர்களுக்கு  சென்ற அவர்கள் நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்திற்கு  வந்தனர். சிறுவர்கள்  ஆடு மேய்ப்பதைக்  கண்ட திருக்கண்ணபுரம் கிராம மக்கள்  நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் கமல் கிஷோருக்கு இது குறித்து புகார் அளித்தனர், இது குறித்து நேரில் விசாரித்த, கிஷோர்  சிறுவர்களை கொத்தடிமையாக பணிக்கு அமர்த்திய பரமக்குடியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார் ..மாரி, கன்னியப்பன், திருப்பதி, சிவராஜ், சின்ராசு ஆகிய ஐந்து சிறுவர்களையும் கமல் கிஷோர்  மீட்டார்.  

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

790 views

பிற செய்திகள்

நுரையீரலை தாக்கிய துப்பாக்கி குண்டு : துப்பாக்கி குண்டை அகற்றி மருத்துவர்கள் சாதனை

சிறுவனின் நுரையீரலை தாக்கிய துப்பாக்கி குண்டை அகற்றி சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

30 views

ஐ.சி.எப். தயாரித்த 60000-வது ரயில்பெட்டி : கொடியசைத்து வழியனுப்பி வைக்கப்பட்டது

சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 60 ஆயிரமாவது ரயில்பெட்டி தெற்கு ரயில்வேக்கு கொடியசைத்து வழியனுப்பி வைக்கப்பட்டது

14 views

நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த லாரி

மதுரை அருகே நடுரோட்டி லாரி தீ பிடித்து எரிந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர்தப்பியுள்ளார்.

13 views

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் : போக்சோ பிரிவின் கீழ் ஆட்டோ ஓட்டுனர் கைது

கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.

48 views

காதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்த இளைஞர் : காதல‌னின் தந்தை வெட்டி படுகொலை

கரூரில் காதல் விவகாரத்தால் இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோத‌லில் காதலனின் த‌ந்தை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

240 views

ஒரே நாளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில், 4 பயணிகளிடம் இருந்து, 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.