சர்வதேச கருத்தரங்கில் தமிழக சிறுமி சாதனை - பள்ளி சார்பில் சிறுமிக்கு பாராட்டு விழா

சர்வதேச விண்வெளி கருத்தரங்கில் விருது பெற்று சாதனை படைத்த நெல்லை சிறுமிக்கு, பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது
சர்வதேச கருத்தரங்கில் தமிழக சிறுமி சாதனை - பள்ளி சார்பில் சிறுமிக்கு பாராட்டு விழா
x
நெல்லை பேட்டையைச் சேர்ந்த பூவியாபாரி கோவிந்தராஜின், 12 வயது மகள் ரக் ஷயசெல்வி , மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அமெரிக்காவின் கோ4குரு நிறுவனம் ஆன்லைன்மூலம் நடத்திய சர்வதேச விண்வெளி கருத்தரங்கில் பங்கேற்ற இவர், விருது பெற்று சாதனை படைத்துள்ளார். சிறுமியை கவுரவிக்கும் வகையில், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் அமெரிக்காவை 10 நாட்கள் சுற்றிப்பார்க்க அந்த நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.பள்ளிக்கு பெருமை சேர்த்த ரக் ஷயசெல்விக்கு, பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆசிரியர்கள், சக மாணவர்கள் சாதனை மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்