தனியார் ஆம்னி பேருந்து லாரி மீது மோதி விபத்து : ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தனியார் ஆம்னி பேருந்து லாரி மீது மோதி அடுத்தடுத்து சென்ற வாகனங்கள் மீதும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
தனியார் ஆம்னி பேருந்து லாரி மீது மோதி விபத்து : ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
மதுரை வாடிப்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து, லாரி மீது மோதி, அடுத்தடுத்து சென்ற வாகனங்கள் மீதும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது,லாரியின் பக்கவாட்டின் மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரி அடுத்தடுத்து சென்ற 2 லாரிகள் மீதும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கியது.இந்த விபத்தில் காயமடைந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் லாரி ஓட்டுநருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்