3 தொகுதி இடைத்தேர்தல் வழக்கு : வரும் 28ம் தேதி விசாரணை- உச்சநீதிமன்றம் அறிவிப்பு
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுடன் சேர்த்து காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, 2 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஆஜரான திமுக வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி முறையிட்டார். இதையடுத்து ஏப்ரல் 1-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருந்த நிலையில், முன்னதாக வரும் 28ம் தேதியே வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
Next Story