பெண்கள் தாக்கியதால் இளைஞர் தற்கொலை

ஈரோடு மாவட்டம் பவானி அருகே கடையாம்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் கட்டையால் தாக்கியதால் மன முடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெண்கள் தாக்கியதால் இளைஞர் தற்கொலை
x
அப்பகுதியை சேர்ந்த பானுமதி என்பவர் மகளிர் சுய உதவி குழு மூலமாக 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. அதில் பத்தாயிரம் ரூபாய் வரை திருப்பி செலுத்திய பானுமதி, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பணத்தை வசூல் செய்ய வந்த மகளிர் குழுவை சேர்ந்த மூன்று பெண்கள், பானுமதி வீட்டில் இல்லாத‌தால் அவரின் மகன்  சக்திவேலிடம் பணத்தை கேட்டு வாக்குவாத‌த்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில், சாலை நடுவே சக்திவேலை மூன்று பெண்களும் அருகில் இருந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பவானி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள், மூன்று பெண்களையும் கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்