தண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.
தண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு
x
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட செல்லம் பாளையம் மேற்கு பீட்டு வேதபாழிசரகம் பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் குடிக்க வந்த குட்டியானை சகதியில் சிக்கிக்கொண்டது. தாய்  யானை எவ்வளவோ முயன்றும், குட்டி யானையால் மேலே வரமுடியவில்லை. இந்த நிலையில் அந்தியூர் ரேஞ்சர் பாலகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணிக்கு சென்று கொண்டு இருந்த போது,  யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு சென்றுள்ளனர்.  காக்காயனூர் ஊர் மக்கள் துணையுடன் தாய் யானையை அங்கிருந்து விரட்டிய, வனத்துறையினர்,  கால்வாயில் இறங்கி குட்டி யானையை யை மேலே கொண்டு வந்து தாய் யானையிடம் சேர்த்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்