மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் காரணமாக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
x
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்த நாளில் சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் பண்டிகை நடைபெற இருப்பதால், மதுரை தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை சித்திரை திருவிழாவுக்காக வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்திருப்பதாகவும், எந்த காரணத்திற்காகவும் வாக்குச்சாவடிகளை மாற்றியமைக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்குகளின் தீர்ப்பை நாளை வழங்குவதாக கூறி தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்