நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா : நெடுமாற பாண்டியனுக்கு சுவாமி செங்கோல் வழங்கும் நிகழ்வு

நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த பதினொராம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா : நெடுமாற பாண்டியனுக்கு சுவாமி செங்கோல் வழங்கும் நிகழ்வு
x
நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த பதினொராம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான நின்ற சீர் நெடுமாற  பாண்டிய மன்னனுக்கு ஆட்சி செய்ய சுவாமி நெல்லையப்பர் செங்கோல் வழங்கும் விழாவை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆயிரம்கால் மண்டபத்திற்கு எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நெல்லையப்பர் கோவிலை  கட்டிய நின்ற சீர் நெடுமாற பாண்டிய மன்னனுக்கு, சுவாமி செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .பாண்டிய மன்னர்களுக்கு பின்னர்,   கோவில் நிர்வாக பொறுப்புகளை பார்த்து வரும் அறநிலையத்துறை  உதவி ஆணையருக்கு பரிவட்டம் கட்டி வெள்ளி பாதமும் செங்கோலும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து செங்கோல், மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமியிடம் சேர்க்கப்பட்டது . இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .


Next Story

மேலும் செய்திகள்