எலிகள் தொல்லையால் உளுந்து சாகுபடி பாதிப்பு - வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

எலிகள் தொல்லையால் உளுந்து பயிர்கள் நாசமாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எலிகள் தொல்லையால் உளுந்து சாகுபடி பாதிப்பு - வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
x
நாகை மாவட்டம், திருமருகல் சுற்று வட்டாரப் பகுதிகளில் எலிகள் தொல்லையால் உளுந்து பயிர்கள் நாசமாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.திருமருகல் ஒன்றியத்தில், விவசாயிகள் ஆயிரம் ஏக்கருக்கும் மேல்  உளுந்து சாகுபடி செய்துள்ளனர்.இந்நிலையில், இரவு நேரங்களில் உளுந்து பயிர்களை எலிகள் கடிப்பதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஒரு ஏக்கருக்கு 3 குவிண்டால் வரை கிடைக்கும் மகசூல், தற்போது ஒரு குவிண்டாலுக்கும் குறைவாகவே  கிடைப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.எனவே உளுந்து பயிர்களை காப்பாற்ற வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்