நவீன நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை - வெறும் 45 நிமிடத்தில் குணமான 2 ஆண்டு நோய்

கத்தியும், ரத்தமும் இன்றி முதுகு தண்ட வட அறுவை சிகிச்சை செய்த கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை
நவீன நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை - வெறும் 45 நிமிடத்தில் குணமான 2 ஆண்டு நோய்
x
கிருஷ்ணகிரி அடுத்த சவுளூர் கிராமத்தை சேர்ந்த செங்குட்டுவனின் மனைவி சின்னபொன்னு. இவர் கடந்த 2 ஆண்டுகளாக கடும் கால் மற்றும் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடந்த 9-ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்தார்.அவரை பரிசோதித்த தண்டு வட அறுவை சிகிச்சை நிபுணர் தனசேகரன், ஜவ்வு அழுத்தம் காரணமாக 2 கால்களின் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். நவீன சிகிச்சை மூலம், நோயாளியுடன் பேசிக்கொண்டே நுண் துளை அறுவை மூலம் 45 நிமிடத்தில் பிரச்சினையை சரிசெய்தார்.உடல் நலம் சீரானதை உணர்ந்த பெண்,அன்றே வீடு திரும்பினார். தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும் இந்த நவீன சிகிச்சைக்கும், மருத்துவருக்கும் அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்