அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

கல்விக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வுக்கு விலக்கு உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
x
* கல்விக்கடன் தள்ளுபடி, பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டு வருவது,
* நீட் நுழைவு தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிப்பது,
* நாடு முழுவதும் உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்க வலியுறுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
* இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, உள் மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களை தேடி தரும் முயற்சி,
* எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் ஏற்படுத்துவது, 
* எஸ்.சி., எஸ்.டி, எம்.பி.சி மற்றும் பி.சி. பிரிவினருக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு கொள்கை செயல்படுத்த சட்டம் இயற்றுவது, 
* அனைத்து மாவட்டங்களிலும் உலக தரம் வாய்ந்த விளையாட்டு அரங்குகள் அமைப்பது, 
* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப 2 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு கொள்கைகளை கைவிட வேண்டும்,
* கைத்தறி உற்பத்தி இனங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுப்பது,
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நாட்கள்,  200ஆக உயர்த்தப்படும் எனவும் அ.தி.மு.க வாக்குறுதி அளித்துள்ளது.   
* அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், மாதாந்திர நேரடி உதவித்தொகையாக ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழக- இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு உடனடி நிரந்தர தீர்வு காண்பது,
* மீன்பிடி தடைக்காலங்களில் வழங்கப்படும் உதவித்தொகையை 7 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* சிறு, குறு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய உறுதியான கொள்கை வகுக்கப்படும், 
* வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்படும்,
* கோதாவரி- காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,
* முல்லைபெரியாறின் குறுக்கே கேரளா புதிய அணை கட்டுவதை தடுக்க அழுத்தம் கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
* மேலும்,  இலங்கையில், தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் சம உரிமை வழங்க அழுத்தம் கொடுக்கப்படும்,
* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி திணிப்பை கைவிட வேண்டும்,
* மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வலியுறுத்தப்படும் எனவும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படடுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்