மக்களவை தேர்தல் - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.
மக்களவை தேர்தல் - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
x
* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழ் மொழியில் செயல்பட நடவடிக்கை - திமுக தேர்தல் அறிக்கை

* நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

* தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - திமுக 

* சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் - திமுக

* கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும், அருங்காட்சியகமும் அமைக்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும் - திமுக

* கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

* மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் 

* பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நிர்ணயிக்கப்பட்ட விலை முறைக்கு கொண்டு வரப்படும் 

* சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய திட்டம் தொடங்கப்படும் - திமுக

* 10ம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை 

* மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் - திமுக

* 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை 

* இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை - திமுக 

* மாணவர்களுக்கு இலவச ரயில் பயண சேவை - திமுக

* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் 

* காவிரி படுகையை பாதுகாக்க சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் - திமுக 

* சேது சமுத்திர திட்டம் பணிகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை 

* பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை 

* மனித கடத்தலை தடுக்க சட்டம் இயற்றப்படும் - திமுக 

* நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 

* சுங்கச்சாவடிகளில் டெண்டர் முடிந்தும் வசூலிக்கப்பட்டு வரும் வரி வசூல் ரத்து செய்யப்படும் - திமுக

* நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் - திமுக

Next Story

மேலும் செய்திகள்