நாடார் சமூகத்தினரை இழிவாக சித்தரிக்கப்பட்ட விவகாரம் - சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப்பட்டதாக தகவல்

சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட சாதி ஆடை மாற்றம் பற்றி எழுதப்பட்டுள்ளது.
நாடார் சமூகத்தினரை இழிவாக சித்தரிக்கப்பட்ட விவகாரம் - சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப்பட்டதாக தகவல்
x
சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட சாதி ஆடை மாற்றம் பற்றி எழுதப்பட்டுள்ளது.அதில் நாடார் சமூகத்தினரை பற்றி அவதூறு கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் எனவும் நாடார் அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர்.இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய பகுதியினை நீக்க தேசிய கல்வி ஆராய்ச்சி  நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் அதன் அடிப்படையில் புதிய பாடப் புத்தகம் இந்த ஆண்டு அச்சிட கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்