தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி : ஒரே நாளில் ரூ. 1 கோடி சிக்கியது

தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பனம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி : ஒரே நாளில் ரூ. 1 கோடி சிக்கியது
x
தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பனம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். சனிக்கிழமை ஒரே நாளில் ஒரு கோடியே 9 லட்சத்து 54 ஆயிரத்து 110 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

மதுரை 

மதுரை அவனியாபுரத்தில் 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், திண்டுக்கல் மெயின் ரோட்டில் 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய், அழகர்கோயில் சாலையில் 72 ஆயிரம் ரூபாய் என மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் மொத்தம் 35 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கியது. 

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 43 லட்சத்து 26 ஆயிரம் ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.  28 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிங்கப்பூர், மலேசியா பணம் மற்றும் 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இந்திய பணம், 16 லேப்டாப்புகள், 160 கை கடிகாரம் என 43 லட்சத்து 26 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களை ஆட்சியர் வீரராகவ ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கோவை 

கோவை கருப்பண்ண கவுண்டர் வீதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கனகராஜ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.  அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். 

திருச்செங்கோடு 



நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணி ஒருவர் வைத்திருந்த 12 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் கைப்பற்றினர்

முசிறி 



திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள மேய்க்கள் நாயக்கன் பட்டியில் தேர்தல் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். காரில் வந்த மொரீசியஸ் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா செலவுக்காக பணம் கொண்டுவந்தது விசாரணையில் தெரியவந்தது. 

குடமுருட்டி

திருச்சி குடமுருட்டி சோதனை சாவடியில், தேர்தல் பிரிவு சிறப்பு தாசில்தார் மோகனா தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு வாகனத்தில் ஆயிரத்து 8 சிறிய வடிவ பித்தளை சொம்புகளும், 500 சங்குகளும் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மாயூரநாதசுவாமி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், 2 லட்சத்து 44 ஆயிரத்து 110 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். 

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தின் கூட்ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் கொண்டு செல்லப்பட்ட கணக்கில் வராத 20 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து ஆரணி கோட்டாச்சியர் அலுவலத்தில் ஒப்படைத்தனர். 

மதுராந்தகம்



காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஈசூர் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தனி வட்டாட்சியர் பர்வதம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் 4 மூட்டைகளில் கொண்டு செல்லப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தேர்தல் பறக்கும்படை தாசில்தார் சத்யா தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். அப்போது, லாரியில் 8 பேரல்களில் கொண்டு செல்லப்பட்ட 8 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். . 






Next Story

மேலும் செய்திகள்