தேர்தல் விதிகள் எதிரொலி : 1,008 பித்தளை சொம்புகள், 500 வெண் சங்குகள் பறிமுதல்

திருச்சியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆயிரத்து 8 பித்தளை சொம்புகளும் 500 சங்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் விதிகள் எதிரொலி : 1,008 பித்தளை சொம்புகள், 500 வெண் சங்குகள் பறிமுதல்
x
திருச்சி-கரூர் சாலையில் உள்ள குடமுருட்டி சோதனை சாவடியில் தேர்தல் பிரிவு சிறப்பு தாசில்தார் மோகனா தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கோயமுத்தூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் அதில் ஆயிரத்து 8 சிறிய வடிவ பித்தளை சொம்புகளும் 500 சங்குகளும் இருந்தன. கோவிலுக்கு பூஜை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்