பொள்ளாச்சி சம்பவம் - பல்வேறு அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
பொள்ளாச்சி சம்பவம் - பல்வேறு அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து, நேற்று அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. வேடசந்தூரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாத நிலையில்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி சம்பவம் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள், திண்டிவனம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  சாலையில் அமர்ந்து  மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர். உடுமலையில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு தங்கள் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்