வாலகுருநாத சுவாமி கோயிலில் மூலவரை சூரியன் தரிசிக்கும் விழா

ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசம்
வாலகுருநாத சுவாமி கோயிலில் மூலவரை சூரியன் தரிசிக்கும் விழா
x
சிவகங்கையில் உள்ள இலுப்பக்குடி வாலகுருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோயிலில் சூரியன் மூலவரை தரிசிக்கும் விழா நடைபெற்றது. ஆண்டு தோறும், தட்சிணாயன காலமான மார்ச் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும், உத்தராயன காலமான செப்டம்பர் 17ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், சூரியன் இங்குள்ள மூலவரை தரிசிப்பது வழக்கம்.அந்த வகையில் நடைபெற்ற விழாவில், சூரிய கதிர்கள் அர்த்த மண்டபம், மகா மண்டபம், உள்பிரகாரம் கடந்து 80 அடி உயரத்தில் உள்ள மூலவர்களை அடைந்து பிரகாசித்தது. இந்த நிகழ்வை அங்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது

நந்தியம்பெருமான் பிறப்பு விழா 



திருவையாறு அந்தணர்குறிச்சியில் நந்தியம் பெருமானுக்கு பிறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்தியபெருமானுக்கு, சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டது.பின்னர், சிறப்பு அலங்காரத்தில் மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த பெருமான், பின்னர் கண்ணாடி பல்லாக்கில் புறப்பட்டு சென்றார்.இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி, திருமழபாடி வைத்தியநாதன் சுவாமி கோயிலில், நந்தியம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்